
ரம்யா பாண்டியனின் ரம்மியமான யோகா போட்டோக்கள்
தமிழ் சினிமா நடிகையும், பிக்பாஸ் 4 பிரபலமுமான ரம்யா பாண்டியன் அன்றைய தினமே யோகா செய்யும் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் மேலும் சில ரம்மியமான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றில் சில கடினமான யோகா முத்திரை புகைப்படங்களம் இடம் பெற்றுள்ளன.
“மூச்சு விடுங்கள், சில போஸ்கள் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் ஆனால் செய்வது கடினமானது, இது நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம். எனது அருமையான குருவுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும், அதற்குக் காரணம் யோகா தான் என்று.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!