
சேத்துமான் அரசியல் படம்: இயக்குனர் விளக்கம்
தற்போது இந்த படம் சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. கொரோனா பிரச்சினை முடிந்ததும் தியேட்டரில் வெளியாகிறது. படம் பற்றி இயக்குனர் தமிழ் கூறியதாவது: இயக்குனர்கள் லிங்குசாமி, வெங்கட் பிரபுவிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு நான் இயக்கி இருக்கும் முதல் படம் இது.
தனியாக படம் இயக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நிறைய நாவல்கள் படித்தேன். அதில் எனக்கு பிடித்த நாவலாக வறுகறி இருந்தது. அதையே திரைக்கதை எழுதி இயக்கி உள்ளேன். அடிப்படையில் இது தாத்தா பேரனுக்கு இடையிலான அன்பை சொல்லும் கதைதான். ஆனால் படம் முக்கியமாக பேசுவது அரசியலை. இது உணவு அரசியலையும் கல்வி அரசியலையும் பேசுகிறது.
கொங்கு வட்டாரத்தில் நடக்கும் கதை என்பதால் படத்தில் நடித்துள்ள அனைவருமே கொங்கு நாட்டு பகுதியை சேர்ந்தவர்கள், அந்த வட்டார மொழி பேசி நடித்திருக்கிறார்கள். அருவி படத்துக்கு இசை அமைத்த பிந்து மாலினி இசை அமைத்திருக்கிறார். காலா படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் விரையில் தியேட்டரில திரையிடப்படுகிறது. என்றார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!