
தி பேமிலி மேன் 3ம் பாகத்தில் விஜய் சேதுபதி?
சமீபத்தில் வெளியான 2வது சீசன் கதையில் இந்தியாவில் ஒரு வெடிகுண்டு திட்டத்தை செயல்படுத்த இலங்கை தீவிரவாத குழு ஒன்றும், பாகிஸ்தான் உளவு பிரிவும் திட்டமிடுவதான கதை. இந்த சீரிசின் பெரும்பகுதி கதை சென்னையில் நடப்பதால், இதன் படப்பிடிப்புகளும் சென்னையில் நடந்துள்ளது. அந்த நேரத்தில் சீரியலின் இயக்குனர்கள், ராஜ் மற்றும் டீகேவும், நடிகர் மனோஜ் பாஜ்பாயும் விஜய் சேதுபதியை சந்தித்து பேசி இருக்கிறார்கள்.
இந்த தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. 2வது சீசன் பற்றிய புரமோசன்களில் பேசி வரும் மனோஜ் பாஜ்பாய் சென்னையில் விஜய் சேதுபதியை சந்தித்ததாக தெரிவித்துள்ளார். "நான் விஜய் சேதுபதியை சந்திக்க விரும்பியபோது அவர் உடனடியாக ஒப்புக்கொண்டார். நாங்கள் ஒன்றாக நிறைய நேரம் செலவு செய்தோம். சென்னையின் உண்மையான மனிதர்களைப் பார்க்க விரும்பினேன் அதற்கான சந்திப்புதான் இது" என்று மனோஜ் பாஜ்பாய் இந்த சந்திப்பு பற்றி கூறியிருக்கிறார்.
2வது சீசனில் சமந்தா இலங்கையை சேர்ந்த தீவிரவாத பெண்ணாக நடித்திருந்தார். இந்த தொடரில் இலங்கை போராளி குழு தலைவர் பாஸ்கரனாக நடிக்க விஜய் சேதுபதியைத்தான் முதலில் அணுகியதாகவும், அவர் நடிக்க மறுத்து அவர் தான் மைம்கோபியை சிபாரிசு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தி பேமிலி மேன் சீரிசின் 3வது சீசனில் நடிக்க விஜய்சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாவும், அதற்காக நடந்த சந்திப்புதான் இது என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!