
மாஸ்டர் ஹிந்தி ரீமேக் : சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை?
இருந்தாலும் அந்தப் படத்தை ஹிந்தி நடிகரை வைத்து ரீமேக் செய்தால் பெரிய வரவேற்பைப் பெறும் என ரீமேக் உரிமையை வாங்க போட்டி போட்டார்கள். தற்போது விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க சல்மான் கானை அணுகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தமிழைப் போலவே விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி ஹிந்தி ஹீரோவை நடிக்க வைத்தால் படம் இன்னும் பிரம்மாண்டமாகும் என எதிர்பார்க்கிறார்களாம்.
ஏற்கெனவே, விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் மாதவன், விஜய் சேதுபதி கதாபாத்திரங்களில் நடிக்க பலரது பெயர்கள் அடிபட்டது. இதுவரையில் அந்த ரீமேக்கைப் பற்றிய உறுதியான தகவல்கள் முடிவாகவில்லை. இந்நிலையில் மாஸ்டர் பட ரீமேக்காவது உறுதியாக நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!