
தி பேமிலிமேன் 2 : சமந்தா ‛வெயிட்டிங்
இந்த தொடருக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தபோதும் ஜூன் 4-ந்தேதி அமேசானில் வெளியாவது உறுதியாகி விட்டது. இந்த நிலையில், மேலும் சில வெப் தொடர்களில் நடிப்பது குறித்தும் சில டைரக்டர்கள் சமந்தாவை அணுகியிருப்பதாக தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் சமந்தாவோ, தி பேமிலிமேன் 2 தொடருக்கு கிடைக்கும் விமர்சனங்களைப் பொறுத்தே அடுத்த தொடரில் நடிப்பதா? வேண்டாமா? இல்லை எந்த மாதிரியான வேடங்களில் இனிமேல் நடிக்க வேண்டும் என்பது பற்றி முடிவெடுப்பேன் என்று கூறி விட்டாராம். முக்கியமாக, இந்த தொடரில் தனது தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டு முதன் முதலாக நெகட்டிவ் ரோலில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதற்கு எந்தமாதிரியான ரியாக்சன் வரப்போகிறதோ என்று சமந்தா பதட்டமான மனநிலையில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!