
மாநாடு சிங்கிள் விரைவில் : யுவன் டுவீட் பதிவு
அதன்பின் எப்போது சிங்கிள் வரும் என்று சிம்பு ரசிகர்களும் காத்திருந்தார்கள். கடந்த வாரம் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் டுவிட்டரில் லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பும் போது சிங்கிள் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, யுவன் தான் தாமதம் செய்கிறார் என்று ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் சுற்றியது. அவற்றிற்குப் பதிலளிக்கும் விதமாக சற்று முன் யுவன் டுவீட் செய்துள்ளார். அதில், “மாநாடு, சிங்கிள் விரைவில் வெளியாகும்,” எனப் பதிவிட்டுள்ளார்.
யுவன் டுவீட்டிற்கு "ஹாட்டின்" எமோஜியைத் தயாரிப்பாளரும், யுவன் டுவீட்டை இயக்குனர் வெங்கட் பிரபுவும் ரிடுவீட் செய்துள்ளார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!