
கைதி 2ம் பாகம்: தயாரிப்பாளர் தகவல்
இந்த நிலையில் கைதி இரண்டாம் பாகும் வரும் என்ற தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியிருக்கிறார். டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய அவர் இதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
முதல் பாகத்தில் கைதியான டில்லியின் பின்புலம் பற்றி அதிகமாக காட்டப்பட்டிருக்காது குறிப்பாக அவர் எதற்கு சிறைக்கு வந்தார் என்று கூறப்பட்டிருக்காது. படத்தின் முடிவில் வில்லன் அடைக்கலத்துக்கும், கைதி டில்லிக்கும் ஒரு கணக்கு பாக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும். இந்த இரண்டையும் முடிச்சுப்போட்டு இரண்டாம் பாகம் உருவாகும் என்று தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!