
அஜித்தின் மற்றொரு பட ரீமேக்கில் சிரஞ்சீவி?
இந்தப் படத்திற்குப் பிறகு அஜித் நடித்த "வேதாளம்" படத்தின் ரீமேக்கிலும், நேரடி தெலுங்குப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். அவற்றிற்கான இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு கதை விவாதங்கள் நடந்து வருகின்றன.
அப்படங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்பட ரீமேக் ஒன்றில் நடிக்க உள்ளாராம் சிரஞ்சீவி. கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா நடித்து வெளிவந்த "என்னை அறிந்தால்" படத்தை பார்த்தாராம். படம் பிடித்துப் போகவே அதை தனக்கேற்றபடி கதை அமைத்துத் தருமாறு "சாஹோ" இயக்குனர் சுஜித்திடம் சொல்லியிருக்கிறாராம். அவரும் கதை விவாதம் நடத்தி வருவதாகத் தகவல்.
விஜய் நடித்த "கத்தி" படத்தின் தெலுங்கு ரீமேக்கான "கைதி நம்பர் 150" மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தவர் சிரஞ்சீவி. தற்போது இரண்டு அஜித் படங்களின் ரீமேக்கில் ஆர்வம் காட்டி வருவது ஆச்சரியம்தான்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!