
ரவிதேஜா படம் மூலம் தெலுங்கில் நுழையும் கர்ணன் நாயகி
மலையாளத்தில் இருந்து தமிழில் நுழைந்து பெயர் பெற்றபின் தெலுங்கு சினிமாவில் அடியெடுத்து வைப்பது தான் மலையாள நடிகைகளின் வழக்கம்". அந்தவகையில் அசின், நயன்தாரா பாணியில் ரஜிஷா விஜயனும் தற்போது தெலுங்கில் நுழைய இருக்கிறார். அறிமுக இயக்குனர் சரத் மாந்தவா என்பவர் இயக்கத்தில் ரவிதேஜா நடிக்கும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் ரஜிஷா விஜயன். இந்தப்படத்தில் கதாநாயகியாக திவ்யான்ஷா கவுசிக் என்பவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!