
நீதிமன்றம் செல்லும் ஆன்டி இண்டியன்
அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். "நாங்கள் தரும் 38 கட்களையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் யுஏ சான்றிதழ் தருகிறோம்" என்று தெரிவித்து விட்டார்கள்.
"38 கட்களை மறுதணிக்கை குழுவினர் தந்துள்ளனர். இத்தனை கட்களை செய்தால் அவை படத்தின் மையக் கதை, காட்சிகள் சீராக நகரும் தன்மை மற்றும் முக்கிய காட்சிகளையும் பாதிக்கும். ஆகவே ரீ ரிவைசிங் கமிட்டி அல்லது கோர்ட்டில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். அங்கே சாதகமான தீர்ப்பு வரும் எனும் நம்பிக்கை உள்ளது. இப்படம் எவ்வித சேதமும் இன்றி திரையரங்குகளில் வெளியாக வேண்டுமென்பதே எங்கள் விருப்பம்" என்று தயாரிப்பாளர் ஆதம் பாவா தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!