
ஷங்கர் - ராம்சரண் படத்தில் பாலிவுட் நாயகி
ஆனால் இந்த செய்தி வெளியானதுமே இந்தியன்-2வை முடித்த பிறகுதான வேறு படத்தை இயக்க வேண்டும் என்று நீதிமன்றம் மூலமாக ஷங்கருக்கு தடை போட்டது லைகா நிறுவனம். அதையடுத்து தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தார் ஷங்கர். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம் நடக்கிறது. இதற்கிடையே ஷங்கருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டாம் என்று டோலிவுட், பாலிவுட் பிலிம் சேம்பர்களுக்கும் லைகா நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
இப்படியான நிலையிலும் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடப்பதாகவே கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆலியாபட் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆலியாபட் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!