
கோல்கட்டா சர்வதே திரைப்பட விழா : தமிழ் இயக்குனருக்கு விருது
வடசென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல், கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படம் கோல்கட்டாவில் நடந்த சர்வதேச கல்ட் பிலிம் திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் கலந்து கொண்டது. போட்டியின் நடுவர்கள் லோகேஷ் குமாருக்கு சிறந்த இயக்குனர் விருதை அளித்துள்ளனர். இதற்கு முன்பு இந்த படம் 11வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!