
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கோ, ஆடுகளம் புகைப்படங்கள்
"கோ" படம் ஒரு சிறந்த அரசியல் படமாகவும், "ஆடுகளம்" படம் மதுரை மண்ணின் களத்தை இயல்பாகக் காட்டிய படமாகவும் ரசிகர்களைக் கவர்ந்தது.
"கோ" படத்தில் முதலில் ஜீவாவிற்குப் பதிலாக சிம்பு தான் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபின் சில காரணங்களுக்காக அப்படத்தை விட்டு அவர் விலகினார். அதன் பின்பு தான் அக்கதாபாத்திரத்தில் ஜீவா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
அது போலவே, "ஆடுகளம்" படத்தில் டாப்சி நடித்த கதாபாத்திரத்தில் முதலில் த்ரிஷா தான் சில நாட்கள் நடித்தார். பின்னர் அவருக்குப் பதிலாக டாப்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சிம்பு, த்ரிஷா ஆகியோர் அந்தப் படங்களில் நடித்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் இப்போது வைரலாகப் பரவி வருகிறது. பலரும் அந்தப் புகைப்டங்களைப் பகிர்ந்து தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!