
படப்பிடிப்புக்கு அனுமதி: அமைச்சருடன் திரையுலகினர் ஆலோசனை
இதைத் தொடர்ந்து தமிழக அரசின் செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திரையுலக பிரமுகர்களை அழைத்து ஆலோசனை செய்தார். இதில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் செயலாளர் ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, செய்தி துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் படப்பிடிப்பை பாதுகாப்புடன் நடத்துவது, பெப்சி தொழிலாளர்களுக்கு மருத்துவ பாதுகாப்பு வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டது. இது முதல்வரின் கவனத்துக் கொண்டு செல்லப்பட்டு அதன் பிறகு முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!