
புஷ்பா இரண்டு பாகம் : உறுதி செய்த தயாரிப்பாளர்
கடந்த சில நாட்களாகவே இப்படம் இரண்டு பாகமாக வெளியாக உள்ளது என செய்திகள் வெளிவந்தன. ஆனால், படக்குழுவினரிடம் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர் ரவிசங்கர் சமீபத்திய பேட்டி ஒன்றில் "புஷ்பா" படம் இரண்டு பாகங்களாக வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.
“புஷ்பா" கதையில் பலவிதமான காலகட்டங்கள் உள்ளன. இரண்டரை மணி நேரத்தில் மொத்த கதையையும் சுருக்குவது இயலாத விஷயம். அதனால், நாங்களும், இயக்குனர், நாயகன் இணைந்து பேசி படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்துள்ளோம். முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இரண்டாம் பாகத்தை ஆரம்பிப்போம். இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பையும் 10 சதவீதம் முடித்துவிட்டோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
நவராத்திரியின் போது முதல் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகத்தை அடுத்த வருட கோடையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!