
திருமணம் நடந்ததை ஒத்துக் கொண்ட சஞ்சனா கல்ராணி
சஞ்சனா கல்ராணிக்கும் டாக்டர் அசிஸ் பாஷா என்பவருக்கும் ஏற்கெனவே திருமணம் நடந்ததாக செய்திகள் வெளிவந்தன. அப்போதெல்லாம் தனக்குத் திருமணமாகவில்லை என்று தெரிவித்தார் சஞ்சனா. ஆனால், அவருடைய அம்மா தன்னுடைய மகள் சஞ்சனாவுக்கும் அசிஸ் பாஷாவுக்கும் மூன்றரை வருடங்களுக்கு முன்பு திருமண நிச்சயம் நடந்ததாகவும், அவர்கள் ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக திருமணம் தள்ளிப் போடப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
அதன்பின் சஞ்சனா கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போது அவருடைய திருமண விவகாரம், முஸ்லிம் மதத்திற்கு அவர் மாறியது உள்ளிட்டவைகள் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்கு திருமணம் நடந்தது பற்றி பேசியுள்ளார் சஞ்சனா. அவருக்கும் அசிஸ் பாஷாவுக்கும் சிறு வயதிலிருந்தே பழக்கம் இருந்ததாம். கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாகவும், பின்னர் திருமணம் செய்து கொண்டதாகவும், அத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!