கொரோனா தாக்கம் அவ்வளவாக இல்லை : இத்தாலி படப்பிடிப்பில் ராஷி கண்ணா
ஏப் 25, 2021
Advertisement
அடங்கமறு, அயோக்யா படங்களில் கதாநாயகியாக நடித்த ராஷி கண்ணா தற்போது தெலுங்கில் நாகசைதன்யா ஜோடியாக "தேங்க்யூ" என்கிற படத்தில் நடித்து வருகிறார். நாகசைதன்யாவுடன் அவர் நடிக்கும் இரண்டாவது படம் இது. விக்ரம் குமார் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இத்தாலியில் உள்ள மிலன் மற்றும் டூரின் ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில் பலரும் தங்களது படப்பிடிப்பை பாதியில் நிறுத்தி வருகின்றனர்.. ஆனால் ராஷி கண்ணாவோ, “இங்கே கொரோனா பரவல் அவ்வளவாக இல்லை.. மக்கள் வழக்கம்போல சர்வ சாதாரணமாக நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்.. நாங்கள் சிறிய அளவிலான படக்குழு என்றாலும் தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்” என கூறியுள்ளார்.
கடந்தமுறை கொரோனா முதல் அலையில் சீனாவுக்கு அடுத்ததாக மோசமாக பாதிக்கப்பட்ட இத்தாலியில், தற்போது அந்த அளவுக்கு கொரோனா தாக்கம் இல்லை என ராஷி கண்ணா குறிப்பிட்டுள்ளது ஆச்சர்யம் அளிப்பதாக இருக்கிறது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!