
பவன் கல்யாண், அசுதோஷ் ராணாவுக்கு கொரோனா
இந்நிலையில் இவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்தது கடந்த 2 நாட்களுக்கு முன் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில், பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.
இதுபோல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பிரபல இந்தி நடிகர் அஷுதோஷ் ராணாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் எழுதியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!