
விக்ரம் பிரபுவின் பகையே காத்திரு
கடைசியாக அவர் நடித்த புலிக்குட்டி பாண்டி படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இந்த நிலையில் பகையே காத்திரு என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதன் படப்படிப்பு இன்று தொடங்குகிறது.
விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார். இவர்களுடன் சாய்குமார், சதீஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாம்.சி.எஸ் இசை அமைக்கிறார். காக்கி என்ற குறும்படத்தை இயக்கிய மணிவேல் இயக்குகிறார்.
படம் பற்றி மணிவேல் கூறியதாவது: விக்ரம் பிரபுவை மனிதில் வைத்து எழுதப்பட்ட கதை. இதற்கு முந்தைய படங்களில் இருந்து மாறுபட்டதாக அவரது கதாபாத்திரம் இருக்கும். அதிரடி ஆக்ஷன் மற்றும் திகில் கலந்த படம். சென்னை, கொச்சி, பொள்ளாச்சி, ஐதராபாத் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!