
அந்நியன் கதை விவகாரம் - ஷங்கர் பதிலடி
இந்நிலையில் இதற்கு விளக்கம் அளித்து ரவிச்சந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார் ஷங்கர். அதில் அவர் கூறியிருப்பதாவது : 2005ல் அந்நியன் படம் வெளியானது. இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் தெரியும் இது என்னுடைய கதை என்று. இப்படத்தின் டைட்டிலில் கூட கதை, திரைக்கதை, இயக்கம் ஷங்கர் என்று தான் வெளியானது. இப்படத்திற்காக சுஜாதா வசனங்கள் மட்டுமே எழுதினார். ஆனால் அவர் இப்படத்தின் கதையை எழுதினார் என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அந்நியன் படத்தில் வசனம் எழுதியதற்காக அதற்கான உரிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. அவர் எந்த விதத்திலும் திரைக்கதையிலோ, பாத்திரப் படைப்பிலோ சம்பந்தப்படவில்லை. எனவே வசனகர்த்தா என்பதைத் தாண்டி அவர் வேறு எந்த வகையிலும் இப்படத்தில் ஈடுபடவில்லை.
இப்பட கதை, திரைக்கதை என்னிடம் இருப்பதால் அதை நான் விரும்பும் வகையில் பயன்படுத்திக் கொள்ளும் முழு உரிமை எனக்கிருக்கிறது. நீங்களோ உங்கள் நிறுவனமோ எந்தவிதமான உரிமைகளையும் கோர முடியாது. உங்களுக்கு அந்த உரிமையை நான் எழுத்துப்பூர்வமாக கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் கதைக்கான உரிமம் உங்களிடம் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. ஒரு தயாரிப்பாளராக அந்நியன் படம் மூலம் லாபம் பெற்றுவிட்டீர்கள். தற்போது தேவையின்றி உங்களுக்கு தொடர்பில்லாத எனது எதிர்கால முயற்சியின் மூலம் ஆதாயம் பெற பார்க்கிறீர்கள். இனி இது போன்று பேச மாட்டீர்கள் என்று நம்புகிறேன்”.
இவ்வாறு தெரிவித்துள்ளார் ஷங்கர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!