பார்டர்-ல் அருண் விஜய்
ஏப் 15, 2021
Advertisement
குற்றம் 23-க்கு பின் இயக்குனர் அறிவழகன், நடிகர் அருண் விஜய் கூட்டணியில் மற்றுமொரு படம் உருவாகி உள்ளது. ரெஜினா, ஸ்டெபி படேல், பகவதி பெருமாள் நடித்துள்ளனர். பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பை நடத்தி முடித்தனர். இப்போது படத்திற்கு ‛பார்டர்" என பெயரிட்டுள்ளனர்.
‛‛இது ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படம். இதை முழுக்க ஆக்ஷன் கலந்த த்ரில்லராக கொடுத்திருக்கிறேன். எனது முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு இருக்கும். ஸ்பை த்ரில்லர் என்றால் தேசபக்தி, தீவிரவாதம் என்று எதிர்பார்ப்பார்கள். கண்டிப்பாக தேசபக்தியை வேறொரு கோணத்தில் சொல்லியிருக்கிறேன். கொரோனா காலகட்டத்தில் மக்கள் திரையரங்கிற்கு நம்பி படம் பார்ப்பதற்கு ஏற்ற படமாக இருக்கும் என்கிறார் அறிவழகன்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!