
3டியில் படமாகும் பாரோஸ் : சந்தோஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம்
சமீபத்தில் இந்தப்படத்தின் துவக்கவிழா பூஜை நடைபெற்ற நிலையில், இதன் படப்படிப்பையும் தாமதமின்றி துவங்கி விட்டார் மோகன்லால். அதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்தப்படம் முழுக்க முழுக்க 3டியில் தயாராகிறது. ஆனால் முதலில் 2டியில் எடுத்து பின்னர் 3டிக்கு மாற்றாமல், 3டி கேமரா மூலமாகவே காட்சிகள் படமாக்கப்படுகின்றன. அதற்கேற்றவாறு நாற்பது வருடங்களுக்கு முன் வெளியான, 3டியில் உருவான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய, ஜிஜோ பொன்னூஸ் என்பவர் இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.
நானூறு வருடங்களுக்கு முன் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது, சேர்த்துவைத்த சொத்துக்களை, பாரோஸ் என்கிற பாதுகவாலன் காவல் காத்து வருவதாக ஒரு புனைவு கதை ஒன்று கேரளாவில் சொல்லப்பட்டு வருகிறது. அந்த கதையைத்தான் படமாக இயக்கி, தானே ஹீரோவாகவும் நடிக்கிறார் மோகன்லால்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!