
ஆரியின் மாஸ் அறிவிப்பு
டைட்டிலை வென்ற கையோடு தனது பட வேலைகளிலும், சமூகசேவையிலும் பிஸியாகி விட்டார் ஆரி. அலேகா", "பகவான்" மற்றும் "எல்லாமே மேல இருக்குறவன் பாத்துக்குவான்" என ஆரி நாயகனாக நடித்து வரும் மூன்று படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவை தவிர சமீபத்தில் இன்னொரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ஆரி. இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உதவியாளர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தில் ஆரி போலீசாக நடிக்கிறார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆரி வெளியிட்டுள்ள பதிவில், "விரைவில் ஒரு மாஸ் அறிவிப்பை வெளியிட உள்ளதாக" தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த அறிவிப்பு ஆரி நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே ஆரியின் அந்த மாஸ் அறிவிப்பிற்காக அவரது ஆர்மியினர் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!