
ரெண்டகம் மூலம் தமிழுக்கு வரும் குஞ்சாக்கோ போபன்
மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகும் இந்தப்படத்தில் அரவிந்த்சாமி இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். அந்தவகையில் சுமார் 25 வருடங்கள் கழித்து அரவிந்த்சாமியும் மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கும் படம் இது என்றும் சொல்லலாம். இந்த படத்தை டி.பி.பெலினி என்பவர் இயக்குகிறார் இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு டொவினோ தாமஸ் நடித்த "தீவண்டி" என்கிற வெற்றி படத்தை இயக்கியவர். நடிகர் ஆர்யா பங்குதாரராக உள்ள ஆகஸ்ட் சினிமாஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!