
கனா ஹிந்தி படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பா?
தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை ஹிந்தியில் "நாட் அவுட்" என்ற பெயரில் டப்பிங் செய்து யு டியுபில் வெளியிட்டுள்ளார்கள். கடந்த மாதம் யூ டியுபில் வெளியான இந்தப் படம் அதற்குள்ளாக 50 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.
தமிழிலிருந்து ஹிந்திக்கு டப்பிங் செய்யப்படும் பல முன்னணி நடிகர்கள், நடிகைகளின் படங்களைக் காட்டிலும் இப்படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருப்பது ஆச்சரியம்தான். கிரிக்கெட் படம் என்பதால் வட இந்தியர்களும் இப்படத்தை அதிகம் ரசிக்கிறார்கள் போலிருக்கிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!