
பார்த்திபனுக்கு 20 வருட இடைவெளியில் தேசிய விருது
அவர் முதன் முதலாக இயக்கி நடித்து 1989ம் ஆண்டு வெளிவந்த "புதிய பாதை" படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. அதற்குப்பிறகு பத்து ஆண்டுகள் கழித்து பார்த்திபன் இயக்கி நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த "ஹவுஸ்புல்" படம் அந்த ஆண்டிற்கான சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது.
அடுத்து இருபது வருட இடைவெளிக்குப் பிறகு மூன்றாவது முறையாக மீண்டும் ஒரு தேசிய விருதைப் பெற்றுள்ளார் பார்த்திபன். 2019ம் ஆண்டு அவரது இயக்கம், நடிப்பில் வெளிவந்த "ஒத்த செருப்பு சைஸ் 7" படத்திற்கு சிறப்பு மென்ஷன் விருதைப் பெற்றுள்ளார்.
இவ்வளவு வருட இடைவெளியில் இந்தியத் திரையுலகில் வேறு யாராவது தேசிய விருதை வென்றிருப்பார்களா என்பது சந்தேகம்தான்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!