
மகனுக்கு கடிதம் எழுதிய பெயரை அறிவித்த கார்த்தி
நடிகர் கார்த்திக்கும் ரஞ்சனி என்பவருக்கும் 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 7 வயதில் உமையாள் என்ற மகள் இருக்கிறாள். கடந்த வருடம் அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான். ஐந்து மாதங்களாக அக்குழந்தைக்கு "கந்தன்" எனப் பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
அதற்காக மகனுக்கு ஒரு கடிதம் எழுதி அப்பெயரை அறிவித்திருக்கிறார் கார்த்தி. “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா,” என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் காலத்தில் பலரும் பல்வேறு மொழிக் கலப்புடன் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர்களை வைக்கும் நிலையில் கார்த்தி அவரது குழந்தைகளுக்கு "உமையாள், கந்தன்" என அழகு தமிழில் கடவுள்களின் பெயரை வைத்துள்ளார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!