
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி
அவரது மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். எஸ்.பி.ஜனநாதனின் உறுதிச் சடங்குகள் நாளை (மார்ச் 15) காலை 10 மணியளவில் மயிலாப்பூரில் நடைபெற உள்ளது.
எஸ்.பி.ஜனநாதன் உடலுக்கு இசையமைப்பாளர் இமான், மன்சூர் அலிகான், பா.ரஞ்சித், ஆர்.பி.சவுத்ரி, அமீர், சேரன், கரு.பழனியப்பன், மனோ பாலா, நாசர், கலையரசன், ஜெயம் ரவி, மோகன் ராஜா, ரவி மரியா, சென்டிராயன், டோரா தாஸ், ஸ்ரீகாந்த் தேவா, தன்ஷிகா, காதல் சந்தியா, வசுந்தரா, அருண் விஜய் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!