
ஹீரோக்களுடன் சமரசம் இல்லாவிட்டால் நிராகரிப்பு : ஷாலு ஷம்மு வேதனைப் பதிவு
இந்நிலையில் ஷாலு ஷம்மு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "பெரிய ஹீரோக்கள் என அழைக்கப்படுபவர்களுடன் சமரசம் செய்துகொள்ளவில்லை எனில், சம்பந்தப்பட்ட பெண்ணின் திறமைகள் நிராகரிக்கப்படுகின்றன. எங்களுக்கு மாற்றம் வேண்டும், வன்கொடுமையை நிறுத்துங்கள், நாங்கள் ஒருபோதும் சமரசமாக மாட்டோம்", என கொந்தளித்துள்ளார்.
ஏற்கனவே தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்க தன்னை படுக்கைக்கு அழைத்தனர் சிலர் எனக் கூறி பரபரப்பை கிளப்பியவர் ஷாலு. அடிக்கடி தன் சமூகவலைதளப் பக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டும் சர்ச்சையில் சிக்குபவர். இந்த சூழ்நிலையில் திடீரென இப்படி ஒரு பதிவை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!