
முருகதாஸ் பட வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஷால்
இந்த நிலையில், விஜய்க்காக முருகதாஸ் உருவாக்கிய கதையில் விஷால் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலானது. கூடவே இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்தத் தகவல் உண்மையில்லை என விஷால் மறுத்துள்ளார். இதனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கும் எனிமி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து து.ப. சரவணன் இயக்கும் படத்திலும், இரும்புத்திரை படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார். இதுதவிர துப்பறிவாளன் 2 படத்தையும் அவர் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!