
ரூ.100 கோடி வசூலித்து உப்பெனா சாதனை
இப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. தெலுங்குத் திரையுலகத்தில் ஒரு புதுமுகம் நடித்து வெளிவந்த படம் கொரானோ காலகட்டத்திலும் ரூ.100 கோடி வசூலித்தது சாதாரண விஷயமல்ல என்ற மகிழ்ச்சியில் இருக்கிறது தெலுங்குத் திரையுலகம்.
இப்படத்தைப் பார்த்த மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள் படத்தையும், படக்குழுவினரையும் பாராட்டினர்.
தியேட்டர் வசூலில் மட்டும் ரூ.100 கோடியைக் கடந்த இப்படத்தின் ஓடிடி உரிமை கூட பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. படத்தில் அறிமுகமான வைஷ்ணவ் தேஜ், கிரித்தி ஷெட்டி ஆகியோருக்கு பல புதிய பட வாய்ப்புகள் தேடி வந்துள்ளன. படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த தமிழ் நடிகரான விஜய் சேதுபதியும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். அவரைத் தேடியும் பல தெலுங்குப் பட வாய்ப்புகள் வருகிறதாம்.
தெலுங்குத் திரையுலகில் கொரானாவிற்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின் வெளியான ஒரு படம் ரூ.100 கோடி வசூலைப் பெறுவது இதுவே முதல் முறை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!