
த்ரிஷ்யம் 3க்கான கதைகளை அனுப்ப வேண்டாம் : ஜீத்து ஜோசப் வேண்டுகோள்
அவர் கூறியுள்ளதாவது ; “சில வருடங்களுக்கு முன் ஒரு எப் எம் ரேடியோ நிகழ்ச்சியில் பேசும்போது, என்னிடம் கதை சொல்பவர்களுக்காக நான் ஒரு ஈமெயில் ஐடி பயன்படுத்துகிறேன் என கூறியிருந்தேன். தற்போது பலரும் த்ரிஷ்யம்-3க்கான கதை என கூறிக்கொண்டு அந்த மெயில் ஐடியில் கதைகளை அனுப்பி வருகின்றனர். இதனால் எனது மெயில் நிரம்பி வழிகிறது. மேலும் த்ரிஷ்யம்-3க்கான கதையை நானே தான் உருவாக்க போகிறேன். அதனால் தயவுசெய்து யாரும் இப்படி கதைகள் அனுப்ப வேண்டாம். காரணம் அவற்றை நான் படிக்க போவதில்லை. மெயிலில் இருந்து அழிக்கத்தான் போகிறேன்” என ஜீத்து கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!