
500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கும் பிரமாண்ட காட்சி
தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் இளவரசி நாகமதி எனும் கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்க இருக்கிறார்கள்.
வி.சி.வடிவுடையான் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் இப்படம் 1800, 1947, 1990 என மூன்று கால கட்டங்களில் நடக்கும் வரலாற்றுக் கதை ஆகும். முதல் கட்டப்படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு சென்னையில் தொடங்க இருக்கிறது.
இதில், 500 குதிரைகளுடன் மல்லிகா ஷெராவத் நடிக்கவுள்ள முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளனர். இதற்காக குதிரைகளும் குதிரை பயிற்சியாளர்களையும் திரட்டும் பணி நடைபெற்று வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!