
பான் - இந்தியா-வுக்குள் நுழையாத தமிழ் சினிமா
அந்த விதத்தில் வரிசையாக சில பான் இந்தியா படங்கள் வெளிவர உள்ளன. அவற்றில் பெரும்பாலான படங்கள் தெலுங்குப் படங்களாக மட்டுமே இருக்கின்றன. ஒரு காலத்தில் தென்னிந்தியத் திரையுலகத்தில் தமிழ்த் திரைப்படங்கள் தான் சாதனை புரிந்த படங்களாக இருந்தன. அந்த இடத்தை தற்போது தெலுங்குப் படங்கள் கைப்பற்றிவிட்டது.
ஜுலை 2ல் "மேஜர்", ஜுலை 16ல் "கேஜிஎப் 2", ஜுலை 30ல் "ராதே ஷ்யாம்", ஆகஸ்ட் 13ல் "புஷ்பா", செப்டம்பர் 9ல் "லைகர்", அக்டோபர் 13ல் "ஆர்ஆர்ஆர்" என இந்தப் படங்கள் அனைத்துமே பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாக உள்ளன. அவற்றில் ஒரு படம் கூட தமிழ்ப் படம் இல்லை என்பது தமிழ்த் திரையுலகத்திற்கு வருத்தமான ஒரு விஷயம்.
விஜய் நடித்த "மாஸ்டர்" படம் பான் இந்தியா படமாகத்தான் வெளிவந்தது. ஆனால், ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான இப்படம் வட இந்தியாவில் படுதோல்வியைச் சந்தித்தது. தெலுங்குத் திரையுலகத்துடன் போட்டி போடும் அளவில் தமிழ் சினிமா இனி வரும் காலங்களில் போட்டி போட்டால் தான் அடுத்த கட்டத்திற்கு நகர முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!