
ஷங்கர் கூட்டணி, மகனை வாழ்த்தும் சிரஞ்சீவி
தமிழ் நடிகர்கள் யாரும் இன்னும் பான்-இந்தியா அளவிற்கு வளராத காரணத்தால் இயக்குனர் ஷங்கரும் தெலுங்கு ஹீரோவான ராம் சரணுடன் இணைய முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.
ஷங்கர், ராம் சரண் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்றுமுன்தினம் வெளியானது. தன் மகன் ராம் சரண் அடுத்து இயக்குனர் ஷங்கருடன் இணைந்திருப்பது அப்பா சிரஞ்சீவிக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
“கலைகளின் மாஸ்டர், எல்லைகளைக் கடந்து, தொலைநோக்குடன் செயல்படுவதில் முன்னோடி இயக்குனர் ஷங்கருடன் ராம் சரண் இணைவது சிலிர்ப்பாக உள்ளது. இந்திய சினிமாவில் தனி முத்திரை பதிக்கும் இயக்குனர்களுடன் அடுத்தடுத்த படங்களில் பணிபுரிவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என மகன் ராம் சரணை வாழ்த்தியுள்ளார் சிரஞ்சீவி.
தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உருவாக்கப்படும் இப்படம், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!