
டாக்டர் ராஜசேகர், ஜீவிதா தம்பதிகளின் இளைய மகளும் நடிகை ஆனார்
தற்போது ஷிவாத்மிகாவும் சினிமாவில் அறிமுகமாகிறார். இன்னும் டைட்டில் வைக்கப்படாத தமிழ் படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் சேரன், டேனியல் பாலாஜி , சரவணன், கிழக்கு சீமையிலே விக்னேஷ் , சிங்கம் புலி, ஜோமல்லூரி , கவிஞர் சினேகன் , நமோ நாராயணன், சௌந்தர்ராஜன் , விஜய் டிவி ஜாக்குலின் , மௌனிகா, மைனா , பருத்திவீரன் சுஜாதா , ஜானகி , பிரியங்கா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை நந்தா பெரியசாமி எழுதி, இயக்க, பாலபரணி ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார். ஸ்ரீ வாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார். வரும் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது .




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!