
தமிழில் பிசியாகும் மஞ்சிமா மோகன்
கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான களத்தில் சந்திப்போம் அவருக்கு அடுத்த அடையாளமாக அமைந்துள்ளது. இதுதவிர விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார், விஷ்ணு விஷாலின் எப்ஐஆர் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 படங்களில் கமிட்டாகி தமிழில் பிசியாகி வருகிறார்.
இது குறித்து மஞ்சிமா மோகன் கூறியதாவது: என்னிடம் களத்தில் சந்திப்போம் படத்தின் கதையை கூறியபோதே என் கதாப்பாத்திரம் நன்றாக வருமென்கிற நம்பிக்கை இருந்தது. படப்பிடிப்பில் அந்த நம்பிக்கை பன்மடங்கு பெருகியது. தற்போது படத்திற்கும், எனது நடிப்பிற்கும் ரசிகர்களிடமிருந்து கிடைத்து வரும் பாராட்டுக்களும், வரவேற்பும் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
தற்போது குயின் படத்தின் மலையாள ரீமேக்கான ஜாம் ஜாம், விஷ்ணு விஷால் நடிக்கும் எப்ஐஆர், விஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் தர்பார் படங்களில் நடித்து வருகிறேன். ஒப்பந்தமாகியுள்ள மேலும் சில படங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளன. என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!