
25வது நாளைக் கடந்த மாஸ்டர், ஈஸ்வரன்
இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. எதிர்பார்த்ததைப் போலவே மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தார்கள். "மாஸ்டர்" படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்து படம் பெரிய வசூலையும் பெற்றது. ஆனால், "ஈஸ்வரன்" படத்திற்கு அப்படியே குறைந்து போனது. எதிர்பார்த்த வசூலையும் பெறவில்லை.
இருந்தாலும் இரண்டு படங்களும் தற்போது 25வது நாளைக் கடந்து தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன. "மாஸ்டர்" படம் ஓடிடியில் வெளிவந்த பின்னும் கடந்த பத்து நாட்களாக தியேட்டர்களில் ஓடி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு வெளிவந்த இரண்டு படங்கள் இந்த ஆண்டில் 25வது நாளைக் கடந்துள்ளது திரையுலகத்தினருக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!