
ராஜமவுலி மீது அதிருப்தியில் போனி கபூர்
சில தினங்களுக்கு இப்படம் அக்., 13ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இது ஹிந்தி தயாரிப்பாளர் போனி கபூரை அதிருப்திக்கு உள்ளாக்கி உள்ளது. காரணம் அவரது தயாரிப்பில் அஜய் தேவ்கன் நாயகனாக நடித்துள்ள "மைதான்" படம் அக்., 15ல் வெளியாவதாக முன்பே அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி போனி கபூர், ""கொரோனா காலத்தில் ஒருவருக்கு ஒருவர் துணையாக இருக்க வேண்டும். ஆனால் திரையுலகில் அப்படி இல்லை. இரண்டு பெரிய படங்கள் ஓரிரு நாள் இடைவெளியில் வருவது விரும்பத்தகாத நிகழ்வு. இரண்டு படத்திற்கும் தேவையில்லாத குழப்பங்களும் வரும், தியேட்டர் உள்ளிட்ட பிரச்னைகளும் வரும். இதனால் வினியோகஸ்தர்களும் பாதிக்கப்படுவார்கள். ராஜமவுலியிடம் பேசியபோது, தயாரிப்பாளர் தான் ரிலீஸ் தேதி முடிவு செய்கிறார், என்றார்" என குறிப்பிட்டுள்ளார்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!