
மகன் படப்பிடிப்பிற்காக அதிகாரத்தை பயன்படுத்தவில்லை ; சுமலதா எம்.பி விளக்கம்
கர்நாடகாவில் மாண்டியாவில் உள்ள அரசாங்கத்தால் மூடப்பட்ட, செயல்படாத சர்க்கரை ஆலை ஒன்றை திறந்து, இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்கான அனுமதியை தனது எம்.பி என்கிற அரசியல் அதிகாரத்தின் மூலமாக சுமலதா பெற்று தந்துள்ளார் என அந்த பகுதியை சேர்ந்த விவசாய அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இதில் துளியும் உண்மையில்லை என மறுத்துள்ளார் சுமலதா
“எனது மகன் நடித்து வரும் படக்குழுவினரே சம்பந்தப்பட்ட அரசு துறையில் முறையான அனுமதியை பெற்றுத்தான் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதில் என் பெயரை இழுப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான். இப்படி குற்றச்சாட்டை கூறியுள்ளவர்களுக்கு ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன், இதுபோன்ற படப்பிடிப்புகள் மூலம் உள்ளூர் வருமானம் அதிகரிக்கவும், உள்ளூர் சுற்றுலா வளரவும் தான் செய்யும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்” என விளக்கம் கூறியுள்ளார் சுமலதா எம்பி.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!