
ராமர் கோயில் கட்ட பவன் கல்யாண் 30 லட்சம் நன்கொடை
“எத்தனையோ தாக்குதல்களுக்கு மத்தியிலும் நம் நாடு பல நூற்றாண்டுகளாக வலிமையுடன் இருந்து வருகிறது. ராமர் உருவாக்கி வைத்த உத்வேகம்தான் அதற்குக் காரணம். இந்த பூமியில் அமைதி தழைத்தோங்க ராமர் தான் காரணம். நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமை காணும் ஒரு நாடு. இங்குதான் மக்கள் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகிறார்கள். ராமரின் ஆட்சி தான் மக்களிடையே பொறுமை உருவாக காரணமாக இருந்தது. ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் உள்ள மக்கள் அவர்களாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகிறார்கள்,” என்றும் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகத்திலிருந்து முதல் சினிமா பிரபலமாக ராமர் கோயில் கட்ட நன்கொடை அளித்துள்ளார் பவன் கல்யாண். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் நன்கொடை அளிக்க முன்வருவார்கள் எனத் தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!