
தெலுங்கில் வெளியான நெடுநல்வாடை
தற்போது சானிஷா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் நெடுநல்வாடை படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கி, அதனை தியேட்டரிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இயக்குநர் செல்வகண்ணன் கூறியதாவது: ஒரு நல்ல படைப்புக்காக நாம் சிலவற்றை தியாகம் செய்யும் போது அந்தப்படைப்பு நிச்சயம் நமக்கான அங்கீகாரத்தைத் தந்தே தீரும். அந்த நம்பிக்கைக்குச் சான்றாக இப்படத்தின் தெலுங்கு வெர்சனைப் பார்த்துவிட்டு பாராட்டுபவர்களின் வார்த்தைகளில் தெரிகிறது. படத்தில் நடித்தவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!