
யுடியூப்பை நிறுத்துங்கள் : தயாரிப்பாளர் பேச்சால் நடிகை நாகதுர்கா அதிர்ச்சி
விழாவில் பேசிய அனைவருமே இந்த படத்தில் அறிமுகமாகும் நடிகை நாகதுர்காவை புகழ்ந்தார்கள். காரணம் இவர் தெலுங்கு நாட்டுப்புற பாடல்கள் மூலம் புகழ்பெற்ற பாடகி. அதேபோல கிராமிய நடனங்களிலும் புகழ்பெற்றவர். இதற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார். இவரது சமூக வலைத்தள பக்கங்களை லட்சக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள். விழாவில் பேசியவர்கள் "தமிழ் சினிமாவில் நாகதுர்கா ஒரு ரவுண்டு வருவார். அவரது பாடும் திறமை, ஆடும் திறமையை சினிமா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, “நாக துர்கா யுடியூப்-ஐ நிறுத்தி விடுங்கள். சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தினால்தான் வெற்றி பெற முடியும்" என்றார். இதனால் மேடையில் இருந்த நாகதுர்கா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பேசிய சித்ரா லட்சுமணன் "யு டியூப் மூலம்தான் நாகதுர்கா இந்த படத்தில் நடிக்கிறார், இந்த மேடையில் நிற்கிறார். தன் வளர்ச்சிக்கு காரணமான யு டியூபை அவர் எப்போதும் கைவிடக்கூடாது" என்றார். இதை கேட்ட நாகதுர்காக அவருக்கு வணக்கம் செலுத்தி நன்றி கூறினார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!