
மா இன்ட்டி பங்காரம் குழுவினரைப் பாராட்டிய சிரஞ்சீவி
மூன்றே நாட்களில் 43 கோடி வசூலித்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இப்படக் குழுவினரைத் தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டியுள்ளார் சிரஞ்சீவி. சமந்தா, அவரது கணவர் ராஜ் நிடிமொரு, படத்தின் இயக்குனர் நந்தினி ரெட்டி உள்ளிட்ட சிலர் அதில் கலந்து கொண்டனர். சிரஞ்சீவியும் அவரது மனைவி சுரேகாவும் படக்குழுவினருக்கு அவர்களது வாழ்த்துகளைத் தெரிவித்து, பரிசு பொருட்களையும் அளித்தனர்.
சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் ஏற்கெனவே படத்தைப் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். தெலுங்குத் திரையுலகத்தின் பாராட்டுக்களால் இப்படம் வார நாட்களிலும் குறிப்பிடும்படியான வசூலைத் தொடர்ந்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!