
தனுஷ் 55 பட தலைப்பு ஓம் : அக்., 16ல் ரிலீஸ்
இந்நிலையில் இந்த படத்திற்கு "ஓம்" என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டர் மற்றும் அறிமுக வீடியோவை வெளியிட்டுள்ளனர். வீடியோவை பார்க்கையில் இது "புஷ்பா" படம் மாதிரி செம்மரம் தொடர்பான பின்னணியில் இருக்கும் என தெரிகிறது. அதோடு படம் வரும் அக்., 16ல் ரிலீஸ் எனவும் அறிவித்துள்ளனர்.
படத்தலைப்பு வெளியிட்டு ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், ""தலைப்பு தெய்வீகமாக தெரிந்தாலும் இதில் உணர்ப்பூர்வமான விஷயங்கள் இருக்கிறது. 65 % படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தனுஷ் சினிமா வாழ்க்கையில் பெரிய பட்ஜெட்டில் ஓம் படம் தயாராகிறது. கார்த்திகேயன் என்ற கேரக்டரில் மம்முட்டி வருகிறார். மற்ற கேரக்டர் விவரம் விரைவில் வரும் அடுத்து டீசர், டிரைலர் வெளியீட்டு விழா இருக்கும்"" என்றார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!