
‛துருவ நட்சத்திரம் : ஜூன் 15க்குள் வெளியிட நீதிமன்றம் அனுமதி
இந்த படத்தின் வெளியீட்டை தடை செய்ய கோரி தொடரப்பட்ட நிதி தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை ஐகோர்ட் இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு....
விக்ரமின் ‛துருவ நட்சத்திரம்" படத்தை ஜூன் 15க்கு முன் வெளியிடலாம். இப்பட நிதி விவகாரங்களை கையாள தனியாக ‛கொண்டாடுவோம் என்டர்டெயின்ட்மென்ட்" என்ற பெயரில் புதிய வங்கி கணக்கு திறக்கவும், அதன் வரவு செலவுகளை கண்காணிக்க பார்வையாளர் ஒருவரை நியமிக்கவும், நீதிமன்ற உத்தரவின்றி இதில் உள்ள பணத்தை எடுக்க கூடாது என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
படத்தின் இயக்குநர் மற்றும் இணைத் தயாரிப்பாளரான கவுதம் மேனன், திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சில கடனாளிகளுக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காக, அவர் ஏற்கனவே அடையாளம் கண்ட சில முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தைப் பெற வேண்டியிருக்கும். மேலும், வெளியீட்டுத் தேதியை இறுதி செய்வதற்கு முன்பு, அவர் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் பிறருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும். ஒருவேளை ஜூன் 15க்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கால அவகாசம் நீட்டிப்பு கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்து, வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஜூன் 23க்கு தள்ளி வைத்தார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!