
பெத்தியில் நடனமாட ஸ்ருதிஹாசனின் சம்பளம் எவ்வளவு
ஏப் 30, 2026
Advertisement
புச்சி பாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்து வரும் படம் "பெத்தி". இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடிக்க, சிவராஜ் குமார், ஜெகபதி பாபு ஆகியோர் இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். ஏற்கனவே ஓரிரு முறை ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இப்போது ஜூன் 25ம் தேதியன்று படம் திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர். தற்போது இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. குறிப்பாக இதில் இடம்பெறும் ஒரு சிறப்பு பாடல் காட்சியில் பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் ஸ்ருதிஹாசன் நடனமாட உள்ளார். இந்த ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் ஸ்ருதிஹாசனுக்கு ரூ.3 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!