படம் பிடித்தால் பாருங்க, இல்லைன்னா வேணாம் : மிஸ்டர் எக்ஸ் இயக்குனரின் புதுப்பிரச்சாம்
ஏப் 13, 2026
Advertisement
மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் ராம் கார்த்திக், சரத்குமார், மஞ்சுவாரியர், அதுல்யாரவி, அனகா உட்பட பலர் நடித்த உளவாளிகள் சம்பந்தப்பட்ட படமான மிஸ்டர் எக்ஸ் ஏப்ரல் 17ம் தேதி ரிலீஸ் ஆகிறது. விஷ்ணு விஷால் நடித்த எப்ஐஆர் படத்தை இயக்கியவர் மனு ஆனந்த். இயக்குனர் கவுதம் மேனன் உதவியாளர்.
மிஸ்டர் எக்ஸ் பட விளம்பர நிகழ்ச்சிகளில் மனு ஆனந்த் பேசியதாவது, ""1960 முதல் 2020 வரையிலான 7 உண்மை சம்பவங்களின் தொகுப்பே இந்த கதை. உளவாளிகள் பற்றி பல படங்கள் வந்திருந்தாலும் இது வித்தியாசமாக இருக்கும். இந்த படம் உருவாக காரணமாக இருந்தவர் 2 பேர். அவர்கள் பற்றி கூட நான் வெளிப்படையாக பேச முடியாது. உளவாளிகளின் வாழ்க்கை விசித்திரம் நிறைந்தது. மர்மமானது.
இதில் நடித்த அனைவரும் தங்கள் கேரக்டர் உணர்ந்து கடுமையாக நடித்து இருக்கிறார்கள். மஞ்சு வாரியரை நடிக்க வைக்கதான் ரொம்ப கஷ்டப்பட்டேன். கதை பிடித்ததால் அவர் ஓகே சொன்னார். கிட்டத்தட்ட 70 வயதிலும் ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒரு ரிஸ்க் காட்சியில் நடித்தார் சரத்குமார். இந்த படம் பிடித்து இருந்தால் பாருங்க, சப்போர்ட் செய்யுங்க. இந்த படம் பிடிக்காவிட்டால் ஆதரவு வேண்டாம். தவறான படங்களை எந்த ரசிகரும் ஊக்குவிக்க வேண்டாம். இந்த படம் உங்களுக்கு பிடிக்கும்"" என்கிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!