
தமிழில் நல்ல இடம் கிடைக்கும்: குஷி ரவி நம்பிக்கை
வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் அறிமுக நிகழ்வு நடந்தது. இதில் நடிகை குஷி ரவி பேசுகையில், “மனிதன் தெய்வமாகலாம்" என் முதல் தமிழ் திரைப்படம் என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இந்த படத்தை அனைவரும் விரும்பி பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். இது முழு குடும்பமும் சேர்ந்து ரசிக்கக்கூடிய ஒரு அழகான திரைப்படம். இந்த படத்திற்கு பிறகு தமிழில் எனக்கொரு நல்ல இடத்தை ரசிகர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்த படத்திற்காக உழைத்த ஒவ்வொரு கலைஞருக்கும் மற்றும் குழுவினருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். அனைவரும் கண்டிப்பாக திரையரங்குகளில் இந்த படத்தை பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!