மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் துரை கூட்டணி
Advertisement
Advertisement
மூன்றாவது முறையாக சுந்தர் சி, வி.இசட் துரை கூட்டணி
மார் 18, 2026
அ நிறம் | அளவு
Advertisement
"இருட்டு", "தலைநகரம் 2" படங்களுக்கு பிறகு சுந்தர் சி, வி.இசட். துரை கூட்டணி மீண்டும் இணைகிறது. இது திகில் கலந்த பேய் படமாக உருவாகிறது. யோகி பாபு, முன்னணி பாலிவுட் நடிகர் ஒருவர், பிரபல தமிழ் நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மோ", "மாயோன்", "மெட்ராஸ் மேட்னி", செல்வராகவன் நடிக்கும் திரைப்படம் ஆகியவற்றை தொடர்ந்து மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஐந்தாவது படைப்பாக இந்த படம் உருவாகிறது. மே மாதம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்போது நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2, விஷால் நடிக்கும் புருஷன் படங்களை இயக்கி வரும் சுந்தர்.சி. சற்று இடைவெளிக்குபின் இதில் கதை நாயகனாக நடிக்க உள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!